சேலத்துக்கு தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது

கிலோ ரூ.13-க்கு விற்பனை செய்யப்படுகிறது;

Update: 2025-03-17 03:23 GMT
சேலத்துக்கு தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது
  • whatsapp icon
கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் குளிர்ந்த ஆகாரங்களை விரும்பி சாப்பிட தொடங்கி விட்டனர். குளிர்பான கடைகள், பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பழமான தர்பூசணி விற்பனை செய்யும் கடைகளிலும் மக்கள் கூட்டத்தை பார்க்க முடிகிறது. தர்பூசணி விற்பனை சூடுபிடிக்க தொடங்கி விட்டது. இதுதொடர்பாக சேலம் சத்திரம் பகுதியில் உள்ள தர்பூசணி மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தர்பூசணி அதிகம் விளைவிக்கப்படுகிறது. அங்கு உள்ள விவசாயிகளிடம் இருந்து மொத்த விலைக்கு வாங்கி அதை லாரிகள் மூலம் சேலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறோம். தற்போது ஒரு கிலோ ரூ.13 முதல் ரூ.15 வரை மொத்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். வருகிற ஏப்ரல் மாதம் ஒரு கிலோ ரூ.17 முதல் ரூ.30 வரை விற்பனை ஆகும் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டை விட இந்தாண்டு தர்பூசணி வரத்து அதிகமாக உள்ளது என்றார்.

Similar News