சேலத்துக்கு சீரான குடிநீர் வினியோகத்துக்கு ஏற்பாடு:

நீரேற்று நிலையங்களில் மாநகராட்சி மேயர், அதிகாரிகள் ஆய்வு;

Update: 2025-03-17 03:26 GMT
சேலத்துக்கு சீரான குடிநீர் வினியோகத்துக்கு ஏற்பாடு:
  • whatsapp icon
சேலம் மாநகராட்சி பகுதி மக்களுக்கு மேட்டூர் தனிக்குடிநீர் திட்டம், நங்கவள்ளி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்யும் வகையில் மேட்டூர் தொட்டில்பட்டி தலைமை நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையங்கள், நங்கவள்ளி சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் மராமத்து, மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து சேலம் மாநகராட்சிக்கான தனி குடிநீர் திட்டத்தின் கீழ் தலைமை நீரேற்று நிலையத்தில் மேட்டூர் காவிரி ஆற்றுப்படுக்கையில் அமைந்துள்ள மின்மோட்டார்களை அவர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் (பொறுப்பு) செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர், எஸ்.செந்தில்குமார், உதவி பொறியாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News