சேலம் மத்திய சிறையில் கைதிக்கு மூச்சு திணறல்
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை;

சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த கல்லாநத்தம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் (49). குடும்ப தகராறு காரணமாக, ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்திருந்தனர். நேற்று முன்தினம், அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சிறையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக சிறை போலீசார் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.