வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் காரைக்கால் அம்மையார் அருளாளர் விழா
திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் காரைக்கால் அம்மையார் அருளாளர் விழா நடைபெற்றது.;
திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் காரைக்கால் அம்மையார் அருளாளர் விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உடன் இணைந்த திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் (இரத்தின சபை -முதல் சபை) திருக்கோயில் ஆகும் காரைக்கால் அம்மையார் திருக்கயிலை சென்று ஆலங்காட்டில் என்றும் பாடிக் கொண்டிருக்கும் பேறு பெற்று பழையனூர் வந்தார் வழி நெடுகிலும் லிங்க வடிவம் தெரிந்ததால் பாதம் படலாகாது என்று எண்ணி திருத்தலையாலே நடந்துவந்து ஆலங்காடு அடைந்தார், திருவாலங்காடு மூத்த திருப்பதிகம் பாடி பங்குனி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தன்று இரத்தின சபையுள் ஐக்கியமாகி என்றும் பாடிக்கொண்டிருக்கிறார். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த திருத்தளத்தில் காரைக்கால் அம்மையாருக்கு பங்குனி மாதம் 02-ஆம் நாள் (16-03-2025) ஞாயிற்றுக்கிழமை , மாலை 5-30 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது, இரவு 10-00 மணியளவில் புஷ்பநாக ஊஞ்சலும் நடைபெற்றது, பங்குனி மாதம் 03-ஆம் நாள் (17-03-2025) திங்கட்கிழமை இன்று இரவு 11-00 மணியளவில் திருவீதி உலாவும், கலை நிகழ்ச்சிகளும், பரதநாட்டியம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்