ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம்

அத்திப்பட்டு புதுநகர் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம்;

Update: 2025-03-17 04:20 GMT
அத்திப்பட்டு புதுநகர் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் டாக்டர் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது யாக கலச பூஜைகளுடன் கலசநீர் மேல தாளங்கள் முழுங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி ஆடினர் பின்னர் கோபுர கலசங்களுக்கும் பத்ரகாளி அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு கலச நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது இதில் வல்லூர் மேலூர் மீஞ்சூர் கொண்டகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுகந்தி வடிவேல் மீஞ்சூர் ஊராட்சி குழு தலைவர் G ரவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News