செஞ்சி முதல்வர் மருந்தகத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அதிகாரிகள் உடன் இருந்தனர்;

Update: 2025-03-17 13:48 GMT
செஞ்சி, அப்பம்பட்டில் முதல்வர் மருந்தகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று செஞ்சி காந்தி பஜார், திருவண்ணாமலை ரோடு மற்றும் கோணை ஊராட்சி அப்பம்பட்டில் உள்ள முதல்வர் மருந்தகங்களில் ஆய்வு செய்தார்.மருந்தகங்களின் செயல்பாடு, விற்பனை விவரங்களை கேட்டறிந்தார். அங்கு வந்த பொது மக்களிடம் தேவைப்படும் பிற மருந்துகள் குறித்தும், மருந்தகத்தின் பயன்பாடு எவ்வாறு உள்ளது என்றும் கேட்டறிந்தார்.ஆய்வின் போது விழுப்புரம் சரக துணைப்பதிவாளர் சிவப்பழனி, கூட்டுறவு சார்பதிவாளர் கண்ணன், தாசில்தார் ஏழுமலை, கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் பழனிகுமார், திருநாவுக்கரசு உடன் இருந்தனர்.

Similar News