வருசநாடு காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.16) சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது சத்யா நகர் பகுதியில் அன்பு என்பவரும், வாலிப்பாறை பகுதியில் விஜயா என்பவரும் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்