வயலூர் முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளிக்கு இலவச திருமணம்
கோவில் நிர்வாகம் சார்பில் தாலிக்கு 4 கிராம் தங்கமும் பட்டு ஆடைகளும் வழங்கப்பட்டது;

திருச்சியை அடுத்த குமார வயலூர் முருகன் கோவிலில் மாற்றுத்திற னாளிக்கு கட்டணமில்லா திருமண திட்டத்தின் கீழ் இந்து அறநிலையத் துறை சார்பில் மாற்றுத்திறனாளிக்கு இலவச திருமணம் நடைபெற்றது. கோவில் நிர்வாகம் சார்பில் தாலிக்கு 4 கிராம் தங்கமும், மணமக்க ளுக்கு பட்டு ஆடைகளும் மற்றும் கோவில் பிரசாதமும் வழங்கப்பட் டன. இதில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கோவில் செயல் அலுவலர் அருண்பாண்டியன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், நாச்சிக்குறிச்சி சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண் டனர்.