
சேலம் மணியனூர் பொடாரன்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34), தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இரவு ரூ.1½ லட்சம் மதிப்புள்ள தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை பார்த்த போது வண்டியை அங்கு காணவில்லை. மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணையன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மோட்டார் சைக்கிளை திருடியது அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பொடாரன் காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர்.