சேலம் அன்னதானப்பட்டியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
நாளை நடக்கிறது;

சேலம் மேற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராஜவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மின்பகிர்மான வட்டத்தின் மேற்கு கோட்டத்தில் நாளை (புதன்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அன்னதானப்பட்டியில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே சேலம் மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.