காவேரிப்பாக்கம் அருகே தெருவின் நடுவில் இருக்கும் மின்கம்பம்

தெருவின் நடுவில் இருக்கும் மின்கம்பம்;

Update: 2025-03-18 04:48 GMT
காவேரிப்பாக்கம் அருகே தெருவின் நடுவில் இருக்கும் மின்கம்பம்
  • whatsapp icon
காவேரிப்பாக்கம் ஒன்றியம், பாணாவரம் ஊராட்சியில் உள்ள கோகுல் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கிருந்து காந்தி சிலைக்கு செல்ல இணைப்பு தெரு உள்ளது. இந்த தெருவின் நடுவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. இதனால் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் யாரேனும் இறந்தால் இந்த தெரு வழியாக உடலை கொண்டு செல்ல முடியாததால் சுற்றி செல்லும் நிலை உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இவ்வாறு இடையூறாக தெருவின் நடுவில் உள்ள மின் கம் பத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று சோளிங்கர் எம்.எல்.ஏ.,ஆட்சியர் , ஊராட்சி நிர்வாகம், மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி இடையூறாக தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என, அப்பகுதி பொதுமக்கள் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News