கொண்டாநகரத்தில் சாலைகள் சீரமைப்பு பணி தீவிரம்
சாலை சீரமைப்பு பணி தீவிரம்;

திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் ராஜீவ் காந்திநகர் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில் இன்று காலை ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம் உத்தரவின் பேரில் சாலைகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.