
கூடலூரில் 2,000 ஏக்கருக்கும் மேல் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. தற்போது இப்பகுதிகளில் இரண்டாம் போக நெல் அறுவடை பணி துவங்கி உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டடத்தில் நேற்று (மார்.17) துவக்கப்பட்டது.