சாலையின் தடுப்பு கம்பியில் இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

விபத்து;

Update: 2025-03-18 15:52 GMT
தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (51). இவர் அப்பகுதியில் உள்ள மதுபான பார் ஒன்றில் வேலை பார்த்து வரும் நிலையில், நேற்று (மார்.17) சமையல் மாஸ்டரை அழைப்பதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது சாலையின் ஓரமாக இருந்த தடுப்பு கம்பியின் மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் உயிரிழந்தார். விபத்து குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News