ஆண்டிபட்டி அருகே ராஜகோபாலன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (54). இவர் நேற்று முன்தினம் இரவு ஆண்டிப்பட்டி மதுரை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில் செந்தில்குமார் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்த ஆண்டிபட்டி போலீசார் நேற்று (மார்.17) வழக்கு பதிவு செய்தனர்.