திருச்சி மாநகராட்சியில் தூய்மைக்கான கணக்கெடுப்பு பணி
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தூய்மைக்கான கணக்கெடுப்பு பணி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியுள்ளது;
திருச்சி மாநகராட்சியானது 5 மண்டலங்கள், 65 வாா்டுகளுடன் இயங்கி வருகிறது. மத்திய நகா்ப்புற வீட்டு வசதி அமைச்சகத்தின் மூலம் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இதன்படி, இந்தாண்டுக்கான கணக்கெடுப்பு பணிக்கு திருச்சி மாநகராட்சிக்கு மத்திய அரசின் சாா்பில் கணக்கெடுப்பு குழுவினா் வந்துள்ளனா். திருச்சி மாநகராட்சியில் தூய்மை கணக்கெடுப்பு பணி, குடிமக்களின் கருத்து, சேவை நிலை முன்னேற்றம், ஆவணப் பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கி நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பின் மூலம், தேசிய தூய்மை தரவரிசையில் திருச்சியின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் இந்த குழுவினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.