உலக நன்மைக்காக ஜீவசமாதி : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
உலக நன்மைக்காக 48 நாள் மகா மண்டல யாக வேள்வியில் கலியுக வராகி சித்தர் ஜீவசமாதி அடைய வேண்டுதல் நடத்தினார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வராகி அம்மனை தரிசனம் செய்தனர்;
திருவள்ளூர் அருகே சென்னிவாக்கத்தில் உலக நன்மைக்காக 48 நாள் மகா மண்டல யாக வேள்வியில் கலியுக வராகி சித்தர் ஜீவசமாதி அடைய வேண்டுதல் நடத்தினார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வராகி அம்மனை தரிசனம் செய்தனர் திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் அருகே சென்னிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை கல்யாண வீரபத்ர சுவாமிகள் ஆலயத்தில் நவபாசன வராகி சக்தி பீடம் கலியுக வராகி சித்தர் தலைமையில் உலக நன்மைக்காக 48 நாள் மகா மண்டல யாக வேள்வி இன்று தொடங்கி நடைபெற்றது உலக மக்கள் நலனுக்காகவும் இயற்கை அழிவுகள் பேரழிவுகளை தடுக்கவும் 1008 மூலிகைகளால் 48 நாட்கள் மகா மண்டல யாக வேள்வி வராகி அம்மனுக்கு நடத்தப்பட்டது எடுத்த காரியம் ஜெயம் பெற இன்று தொடங்கி வருகிற மே மாதம் நான்காம் தேதி வரை நோய்கள் நீங்கவும் கலைகள் வளரவும் தொல்லைகள் நீங்கவும் அனைத்தும் கிடைக்க 48 நாட்கள் தொடர்ச்சியாக இந்த மகா மண்டல யாக வேள்வியானது நடத்தப்படுகிறது இதில் கலியுக வராகி சித்தர் சரவணன் உலக நன்மைக்காக ஜீவசமாதி அடைய தொடர்ச்சியாக வேள்வியில் தனது வேண்டுதலை நடத்த உள்ளதும் குறிப்பிடத்தக்கது