
வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் அருகே, சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிவகோபால் என்பவருக்கு சொந்தமான வாகனங்கள் துடைக்கும் கிரீஸ் துணிகள், பழைய துணிகள் மற்றும் பஞ்சு குடோன்கள் செயல்பட்டு வருகின்றது. இந்தக்குடோனில் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் குடோனின் அனைத்து பகுதிகளிலும் பரவி கொழுந்து விட்டுஎரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை, சிப்காட், கலவை, ஆற்காடு ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், பஞ்சு, மூலப்பொருட்கள் கருகின. இந்த சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.