கத்திமுனையில் பணம், செல்போன் பறித்த இருவர் கைது

மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரியிடம் கத்திமுனையில் பணம், செல்போன் பறித்த இருவர் கைது திருட்டில் ஈடுபட்ட நபர்கள் பைக்கில் தப்பித்து செல்லும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;

Update: 2025-03-19 05:59 GMT
கத்திமுனையில் பணம், செல்போன் பறித்த இருவர் கைது
  • whatsapp icon
மதுரவாயலில் மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரியிடம் கத்திமுனையில் பணம், செல்போன் பறித்த இருவர் கைது திருட்டில் ஈடுபட்ட நபர்கள் பைக்கில் தப்பித்து செல்லும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பூந்தமல்லி அருகே மதுரவாயல் அடுத்த வானகரம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ( வயது 43 ) இவர் பழைய இரும்பு சாமான்கள் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் விடியற்காலை ஆலப்பாக்கம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.அப்பொழுது 2 வாலிபர்கள் அவரை மறித்து , கத்தி முனையில் அவர் பாக்கெட்டில் வைத்து இருந்த ரூ 1000 பணம் மற்றும் ஒரு செல்போனை பறித்துக் கொண்டனர்.அவர் திருடன் திருடன் என கூச்சல் போட்டப் போது , வழிப்பறி கொள்ளையன் 2 பேரும் கற்கள் மற்றும் கூல் டிரிங்க்ஸ் பாட்டிலை வீசி தப்பிச் சென்றனர். இதுபற்றி வியாபாரி இசக்கி மதுரவாயல் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் என்று தெரிந்தது. உடனே, போலீசார் ஆவடி மோரை என்ற ஊரைச் சேர்ந்த தவக்குமார் மகன் அஜய் ( 22 ) என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கஞ்சா உள்ளிட்ட 3 வழக்குகள் நிலையில் உள்ளது தெரிய வந்தது. இதேபோல் ஆவடி அடுத்த வெள்ளைச் சேரி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் ( 24 ) என்பவரை கைது செய்தனர்.இவர் மீது ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் தேனாம்பேட்டை மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.அவர்களிடமிருந்து 37 கிராம் தங்க நகைககள் , ரூ 1000 ரொக்கம் , ஒரு செல்போன், மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் மீட்கபட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் பைக்கில் தப்பித்து செல்லும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Similar News