கொலை செய்யப்பட்ட காவலர் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்
கொலை செய்யப்பட்ட முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் பிஜிலி;

நெல்லை டவுனை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி நேற்று அதிகாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உடன் அவரது உறவினர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஜாகிர் உசேன் பிஜிலி உடலை வாங்க அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.