காவல்துறையில் ரோந்து பணியின் போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவர் கைது
கைது;

கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (மார்ச்.18) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள திரையரங்கு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற சுப்பிரமணியன், லியாக்கத் அலி கான் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.28,800 மதிப்புள்ள 720 லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.