விழுப்புரத்தில் சம்பூர்ணதா அபியான் திட்ட ஆய்வுக் கூட்டம்

சம்பூர்ணதா அபியான் திட்ட ஆய்வுக் கூட்டம்;

Update: 2025-03-19 17:05 GMT
விழுப்புரத்தில் சம்பூர்ணதா அபியான் திட்ட ஆய்வுக் கூட்டம்
  • whatsapp icon
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சம்பூர்ணதா அபியான் திட்டம் தொடர்பாக அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது.விழுப்புரம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசுகையில், 'முன்னேற்றத்தை நாடும் வட்டாரமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் 16 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதில், திருவெண்ணெய்நல்லுார் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சம்பூர்ணதா அபியான் நிகழ்வு அடிப்படையில், சுகாதாரம், ஊட்டச்சத்து, வேளாண்மை, மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் கீழ் 6 குறியீடுகளை நுாறு சதவீதம் நிறைவு செய்ய வேண்டும்.இந்த குறியீடுகளில் 4 இலக்குகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 2 குறியீடுகளின் இலக்கை நுாறு சதவீதம் அடைய வேண்டும்' என்றார்.தொடர்ந்து கூட்டத்தில், 2 குறியீடுகளை அடைய அலுவலர்களுக்கு அறிவுரை, ஆலோசனை வழங்கப்பட்டது.மாவட்ட திட்டக்குழு அலுவலர் நடராஜன், வேளாண் துறை இணை இயக்குனர் ஈஸ்வர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரவி உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Similar News