போலீசார் குவிப்பு

சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே பாரில் அடிதடிபோலீசார் குவிப்பு;

Update: 2025-03-20 05:52 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே தனியார் பார் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் பாரில் ஜல்லியூரை பிரதாப், வசந்தகுமார், சண்முகசுந்தரம் ஆகிய மூன்று பேரும் பாரில் மது குடிக்க வந்தனர். அப்போது அந்த மதுபாரில் சப்ளையர்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்த அருண், அலெக்ஸ் வசந்த்பவித்ரன் ஆகியோரிடம் இவர்கள் மூன்று பேரும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பிறகு மதுபாரில் இருந்து பிரதாப், வசந்தகுமார், சண்முகசுந்தரம் ஆகியோர் கிளம்பி சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து பிரதாப், வசந்தகுமார் சண்முகசுந்தரம் ஆகிய மூவரும் மீண்டும் அந்த மது பாருக்கு வந்து பார் மேலாளரிடம் தங்களது செல்போனை காணவில்லை என்று கூறினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி ஆனது. இதில் சப்ளையர் அருண் என்பவர் பிரதாபின் மண்டையில் கம்பியால் அடித்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதும். உடனடியாக அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனால் பாரில் கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் முன்னெச்சரிக்கையாக பாரின் முன்பாக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News