திருநெல்வேலி மாவட்டம் நரசிங்கநல்லூர் ஊராட்சி தீன் நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நியாய விலை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கடையானது இன்னும் ஓரிரு வாரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கூட்டுறவு நெல்லை மண்டல இணை பதிவாளர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த பணிகளை நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் துரிதப்படுத்தியுள்ளார்.