லாரி திருட்டில் மூளையாக செயல்பட்டவர் கைது

கைது;

Update: 2025-03-20 09:57 GMT
தேனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான லாரியை 2015ஆம் ஆண்டு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தேனி போலீசார் திருடுவதற்கு உதவிய இருவரை கைது செய்தனர். ஆனால் லாரியை கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் திருட்டில் மூளையாக செயல்பட்ட ராமச்சந்திரன் என்பவரை கைது செய்ய தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. நேற்று (மார்.19) போலீசார் ராமசந்திரனை கைது செய்தனர்.

Similar News