போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் அசோக். இவர் ஆடுகள் வளர்த்து வரும் நிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் கொட்டத்தில் ஆடுகளை கட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று (மார்ச்.19) காலை எழுந்து பார்த்தபோது கொட்டத்திலிருந்த 2 ஆடுகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.