ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து பிரகாஷ் (28). இவர் நேற்று (மார்.19) கம்பத்தில் தனது வேலையை முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக பைக்கில் சென்று உள்ளார். கம்பம் சின்னமனூர் சாலையில் வந்து கொண்டிருந்த போது இவருக்கு பின்னால் சீனிவாசன் என்பவர் ஓட்டி வந்த பிக்கப் வாகனம் முத்து பிரகாஷ் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.