சின்னமனூர் அருகே அய்யநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்தி (25). இவர் கடந்த 16-ம் தேதி இரவு சீலையம்பட்டி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் குகன் என்பவர் ஓட்டி பைக் சக்தி பைக் மீது மோதியது. இதில் சக்தி படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் நேற்று (மார்.19) வழக்கு பதிவு.