பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.19) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது பாலஜெகதீஷ் என்பவர் பொது இடத்தில் நின்று கொண்டு பொதுமக்களை ஆபாசமாக பேசியதுடன், போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார். போலீசார் எச்சரித்தும் கேட்காத நிலையில் பாலஜெகதீஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.