திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக் குழு கூட்டம் ஒரு வருடமாக நடைபெறவில்லை. இதனால் மக்கள் பணி செய்ய முடியவில்லை எனக் கூறி ஒன்றிய கவுன்சிலர்கள் இன்று (மார்ச் 20) பாப்பாக்குடி ஊராட்சி ஓன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகனிடம் மனு அளித்தனர். இதனால் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.