ரோட்டரி சங்கம் - அரக்கோணம் மற்றும் முத்தூட் அன்பின் நிழல் இணைந்து நடத்திய இலவச இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.அரக்கோணம் தர்மராஜா கோவில் தெரு, வணிகர் சங்கம் திருமண மண்டபம் அருகில் நடைபெற்றது. முகாமில் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு, கொலஸ்ட்டரால், எடை, உயரம், சிறுநீரக பாதிப்பு, மஞ்சள் காமாலை நோய்கள், BMI உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பலரும் பயனடைந்தனர்.