நெமிலி பள்ளியில் அறிவியல் கண்காட்சி!

பள்ளியில் அறிவியல் கண்காட்சி!;

Update: 2025-03-21 04:53 GMT
நெமிலி நடராசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் எம்.விஜய பாஸ்கர் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் செழியன் கலந்து கொண்டு மாணவர்களிடம் செயல் முறைகளை கேட்டறிந்தார். மாணவர்களின் செயற்கை நுண்ணறிவு, ராக்கெட் தொழில்நுட்பம், செயற்கைகோள், மாஸ் மீடியா, மருத்துவம் போன்ற மாணவர்களின் படைப்புகள், ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து மாணவர்கள் விளக்கம் அளித்தனர். மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News