காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு கூட்டம்
காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு கூட்டம்;
காவேரிப்பாக்கம் ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் அனிதா குப்புசாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஹ்மத் பாஷா, சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் முனியம்மாள் வரவேற்றார். கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு 31தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து இக்கூட்டத்தில் தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட பணிகள் குறித்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விவாதம் செய்தனர். அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.