திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட காவல் நிலையம் அருகில் சாலையில் மிகப்பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.இதனை தொடர்ந்து பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சரி செய்துள்ளனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.