சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் கிழக்கு மாவட்டம், கெங்கவல்லி-ஆத்தூர் சட்டசபை தொகுதிகளுக்கான பாகமுகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் எனது (எஸ்.ஆர்.சிவலிங்கம்) தலைமையில் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டமானது ஆத்தூர் ஒன்றியத்திற்கு அண்ணா கலையரங்கத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கும், ஆத்தூர் நகரம், நரசிங்கபுரம் நகரத்திற்கு ஆத்தூரில் உள்ள துளுவ வேளாளர் மண்டபத்தில் மதியம் 12 மணிக்கும், ஒருங்கிணைந்த பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு ஏத்தாப்பூரில் உள்ள கண்ணைய ஆசாரி திருமண மண்டபத்தில் மாலை 3 மணிக்கும் நடக்கிறது. இதேபோல், கெங்கவல்லியில் ஒருங்கிணைந்த தலைவாசல் ஒன்றியத்திற்கு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கும், கெங்கவல்லி ஒன்றியத்திற்கு ரெட்டியார் திருமண மண்டபத்தில் மதியம் 12 மணிக்கும் நடக்கிறது. இந்த கூட்டங்களுக்கு கட்சி நிர்வாகிகள், கட்சி தலைமையால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கட்சி செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், பாகமுகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.