உடையார்பாளையம் அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
உடையார்பாளையம் அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
அரியலூர், மார்ச் 21- அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், காவல் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, உடையார்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி கலந்து கொண்டு பேசுகையில், "உங்கள் வாழ்க்கை உன்கையில்" என்பது போல நீ நிறைவான கல்வி உயர் பதவியில் சேர்ந்தால் உனக்கு பெயர்,புகழ், வாழ்க்கைதானாக வந்துசேறும், படிக்கும் வயதில் உன் மனம் திசை மாறினால் வாழ்க்கை பாழாகி விடும். உனக்கு வெளியில் மனதளவில், உடல்அளவில் யாறேனும் தொந்தரவு செய்தால் உடனடியாக 181 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தேர்வு நேரம் மனதை திடமாக வைத்து நன்கு படித்து அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வேண்டும் கேட்டுக் கொண்ட அவர், தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், தலைமைக் காவலர் ராஜலெட்சுமி, ஆசிரியர்கள் பூசுந்தரி, தமிழரசி, பாவை.சங்கர், ராஜசேகரன், மரகதம், மாரியம்மாள், தமிழாசிரியர் ராமலிங்கம் உடற் கல்விஆசிரியர் ஷாயின்ஷா மற்றும் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.