இருளில் மூழ்கியுள்ள காந்தி பூங்காவிற்கு மின்விளக்கு அமைக்க ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற மாநாட்டு விளக்க பிரச்சார கூட்டத்தில் நகராட்சிக்கு கோரிக்கை.
இருளில் மூழ்கியுள்ள காந்தி பூங்காவிற்கு மின்விளக்கு அமைக்க ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற மாநாட்டு விளக்க பிரச்சார கூட்டத்தில் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.;
அரியலூர், மார்ச்.22- இருளில் மூழ்கியுள்ள காந்தி பூங்காவிற்கு மின் விளக்குகள் அமைக்கவும் குப்பை குளம் நிறைந்து காணப்படும் பூங்காவை சுற்றிலும் தூய்மைப்படுத்தவும் மாநாட்டு விளக்கப் பிரச்சார கூட்டத்தில் நகராட்சிக்கு சி.பி.எம் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏப்ரல் 2, 3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெறும் 24-வது அகில இந்திய மாநாட்டு விளக்க பிரச்சார கூட்டம் காந்தி பூங்கா முன்பாக ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் கண்டன உரை நிகழ்த்தினார்.கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்ரவீந்திரன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.பத்மாவதி, மாவட்ட குழு உறுப்பினர் டி.தியாகராஜன் ஆகியோர் கோரிக்கையில் குறித்து பேசினர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.கோவிந்தராஜ்,, கொல்லாபுரம் கிளை செயலாளர் ஆகாஷ்வீரன், கீழக்குடியிருப்பு மகேந்திரன், மகிமைபுரம் அற்புதராஜ்,. நரசிங்கபாளையம் பெருமாள் மற்றும் கோபாலகிருஷ்ணன், கொம்பேடு ராமச்சந்திரன் மற்றும் சிவசங்கரி, விஜயலட்சுமி, குருவாலப்பர்கோயில் ராஜகோபால் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா மின்விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. மேலும் காந்தி சிலை உள்புறம் சுற்றிலும் தூய்மை இல்லாமல் இலை சருகுகள் நிறைந்து குப்பைகளாக காட்சியளிக்கிறது. கிராமப்புறங்களில் கட்டப்பட்டு பாதி நிலையில் நிறுத்தப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை விரைவாக கட்டி முடிக்க நிதி வழங்கி உதவ வேண்டும்,, நரசிங்கபாளையம் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், கங்கைகொண்ட சோழபுரம், கொல்லாபுரம், தங்கவடங்கநல்லூர் கிராம மக்களுக்கு நிரந்தர பட்டா வழங்க மனு கொடுத்தும் பயனில்லை எனவே உடனடியாக மக்களுக்கு நிரந்தர பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தாட்கோ மூலம் வழங்கப்படும் மானிய கடனை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் தடை இன்றி வழங்க வேண்டும், கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய குழு உறுப்பினர் சொக்கலிங்கம் நன்றி கூறினார்.