ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு
ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு நடைபெற்றது.;
அரியலூர், மார்ச் 21- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில், உணவு பாதுகாப்புத் துறை சார்பில், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வரலட்சுமி தலைமை வகித்து பேசினார். அக்கல்லூரி முதல்வர் ரமேஷ் முன்னிலை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் சீராளன் கலந்து கொண்டு போதைப் பொருள்களினால் ஏற்படும் தீங்குகள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் அவர், இதுகுறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முடிவில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை,அக்கல்லூரியின் இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் மா.ராசமூர்த்தி, உணவு பாதுகாப்பு அலுவலர் அகத்தியா, காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.