நெடும்புலி ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரம் ரத்து-ஆட்சியர் உத்தரவு

நெடும்புலி ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரம் ரத்து;

Update: 2025-03-22 04:28 GMT
பனப்பாக்கம் பகுதியில் நெடும்புலி, துறையூர், பெருவளையம் உள்ளிட்ட கிராமங்களை இணைத்து 1,213 ஏக்கர் பரப்பளவில் புதிதாக சிப்காட் வளாகம் அமைக்கப்பட்டது. இந்த சிப்காட் வளாகத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் டாடா மோட்டார்ஸ், லேண்ட் ரோவர்ஸ், ஜாக்குவார் உள்ளிட்டகார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்தநிலையில் டாடா நிறுவனம் நெமிலி ஒன்றியத்திற்கு உட் பட்ட நெடும்புலி ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டிட வரைபட அனுமதி கோரி அதற்கான தொகையை செலுத்தியிருந்தது. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் மாறன், இதுவரை ஒப்புதல் வழங்காமல் கால தாமதம் செய்து வருவதாக டாடா நிறுவனத்தின் சார் பில் ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிறுவனம் விண்ணப்பம் செய்து, அதற்கு உண்டான தொகையை செலுத்தியும் உரிய அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி தனது கடமைகளை சரிவர செய்யாத ஊராட்சி தலைவர் மாறன் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் அவரது அனைத்து நிதி அதிகாரத்தையும் ரத்து செய்து ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார். மேலும் நெடும் புலி ஊராட்சியில் நிதி சார்ந்த நிர்வாகங்களை நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணித்து செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Similar News