வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் ரயில் மோதி நேற்று இரவு வாலிபர் ஒருவர் இறந்தார். அவருக்கு 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரிய வில்லை. இது குறித்து காட்பாடி ரயில்வே போலீசருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பத்மராஜா சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்த வாலிபர் தண்டவாளத்தை கடக்கும் போது இருந்தாரா?. அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா எனவும், இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.