காதல் ஜோடி வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம்
காதல் ஜோடி வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம்;
திண்டுக்கல் மாவட்டம் வலையபட்டி புதுப்பட்டி சேர்ந்தவர் மதன்குமார் வயது 23 வேன் டிரைவராக உள்ளார். இவர் செங்கல் ஏற்றுவதற்காக வடமதுரை அருகே உள்ள ஒரு செங்கல் சூளைக்கு தனது வாகனத்தை ஓட்டி செல்வது வழக்கம். இந்நிலையில் செங்கல் சூலையில் வேலை செய்த கரூர் மாவட்டம் மாயனூர் விரியம்பட்டி பகுதியைச் சேர்ந்த 21 வயது சுகுணா என்ற இளம் பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் தகவல் சுகுணாவின் வீட்டிற்கு தெரிய வந்தது. இதனை அடுத்து அவருக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க அவரது வீட்டார் முடிவு செய்தனர். இதனை அறிந்த மதன்குமார் தனது காதலியை அழைத்துக் கொண்டு திருப்பூர் சென்று சென்னையாம்பாளையம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு வடமதுரை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இரு வீட்டு பெற்றோரையும் வரவழைத்த சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் விசாரணை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் இரண்டு வீட்டாரும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு மணமக்களை அனுப்பி வைத்தனர்.