பொதுத் தேர்வு எழுத இருக்கும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கையேடு வழங்கிய சிஈஓ

பொதுத் தேர்வு எழுத இருக்கும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கையேடு சிஈஓ வழங்கினார்;

Update: 2025-03-22 14:18 GMT
அரியலூர் மார்ச்.22- ஜெயங்கொண்டம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருக்கும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கையேடு வழங்கினார். இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளி க் கல்வி உதவி திட்ட அலுவலர் சக்கரவர்த்தி அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஐயப்பன், ஆசிரிய பயிற்றுனர் டேவிட் ஆரோக்கிய ராஜ் சிறப்பு வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர் கலைச்செல்வி உடன் இருந்தனர்.

Similar News