சேலத்தில் பைக் டாக்சியை தடை செய்யக்கோரி

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-03-23 05:09 GMT
சேலத்தில் பைக் டாக்சியை தடை செய்யக்கோரி
  • whatsapp icon
விரோதமாக இயக்கப்படும் பைக் டாக்சியை தமிழக அரசு தடை செய்யக்கோரி சேலம் கோட்டை பகுதியில் நேற்று ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் சங்கர், தியாகராஜன், வெங்கடபதி, உதயகுமார் உள்பட ஆட்டோ தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியின்படி புதிய ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கட்டணத்தை மாற்றி 1½ கிலோ மீட்டருக்கு ரூ.50 மற்றும் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 என நிர்ணயம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Similar News