
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட நட்டாலம் ஊராட்சியில் ஸ்டார் ஜங்ஷன் பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப் போவதாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தகவல்கள் பரவியது. இதனை அடுத்து முள்ளங்கினாவிளை, நட்டாலம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இரவில் போராட்டம் நடத்தினர். மேலும் விடிய விடிய கடை முன்பு காவல் இருந்தனர். இதை அடுத்து மதுபானம் கொண்டு வந்த வாகனம் அங்கு நிறுத்தாமல் ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். இதனை அடுத்து அனைத்து கட்சி சார்பில் நட்டாலம் ஊராட்சி செயலாளரிடம் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என மனு அளித்தனர். இந்த நிலையில் மது கடை ஷட்டர் முழுவதும் சுற்றிலும் கண்டன போஸ்டர்களை ஒட்டி வைத்திருந்தனர். நேற்று மீண்டும் அந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி மேற்கொள்ளதாக பரவிய தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் நேற்று கடையின் முன்பு அமர்ந்து போராட்டங்களை நடத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.