சோளிங்கர் அருகே மக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது
மக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது;

சோளிங்கர் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ரெண்டாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது வாலிபர் ஒருவர் கையில் கத்தியை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தார், போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தியதில் குப்பக்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபர் என்பது தெரிந்தது. இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.