சோளிங்கர்:சிமெண்டு சாலை தொடக்க விழா-எம்எல்ஏ பங்கேற்பு
சோளிங்கர்:சிமெண்டு சாலை தொடக்க விழா-எம்எல்ஏ பங்கேற்பு;

சோளிங்கர் தொகுதி அன்வர்திகான்பேட்டை காமராஜர் தெருவில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட் சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் நாக ரத்தினம் தலைமை தாங்கினார். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜா, மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய தலைவர் உதயகுமார் வரவேற்றார். விழாவில் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி சிமெண்டு சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கும். கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார். இதில் நிர் வாகிகள் பழனிபிரசாத், மணவாளன், அல்டாப், கஜேந்திரன், அண்ணாதுரை உள்பட பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.