
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வருபவர் சுரேஷ் (வயது 41). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (36) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுரேஷ் நேற்று பள்ளி வேலையாக அந்த பகுதியில் உள்ள தபால் அலுவலகத்திற்கு சென்ற போது, அவ்வழியாக வந்த பிரகாஷ், அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.