மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்
மதுரையில் மருத்துவ முகாமை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.;
தமிழக முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, மதுரை வடக்கு மாவட்டம், மதுரை மேற்கு தொகுதி தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக பெத்தானியாபுரம் ராயல் பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாமினை இன்று (மார்ச்.23)வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார் . இந்த மருத்துவ முகாமை வாஸன் கண் மருத்துவமனை மற்றும் Dr.சோலை'ஸ் புனிதம் மருத்துவமனை இணைந்து நடத்தினார்கள் .இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.