கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.22) குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள பொது கழிப்பிடம் அருகே அஜித் என்பவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அங்கு உட்கார்ந்து மது குடித்துக் கொண்டிருந்துள்ளார். போலீசார் எச்சரித்தும் அவர் கேட்காத நிலையில் அஜித் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.