கலவைப்புதூர் சிவன் ஆலயத்தில் பங்குனி மாத வழிபாடு
சிவன் ஆலயத்தில் பங்குனி மாத வழிபாடு;
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த கலவைப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமி அம்மை உடனாகிய அருள்மிகு சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் இன்று(மார். 23) பங்குனி மாதம் ஒன்பதாம் நாள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.